தமிழக அரசு நடத்தி வரும் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ சிறப்பு மருத்துவ முகாம்கள் மாநிலம் முழுவதும் சிறப்பாக நடைபெற்று, இதுவரை 92,836 பேர் பயனடைந்துள்ளனர்.
முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆகஸ்ட் 2ஆம் தேதி இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார். ஒவ்வொரு சனிக்கிழமையும், கிராமப்புறங்களிலும் நகர்ப்புறங்களிலும் பகுதி வாரியாக மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த முகாம்களில், இரத்த பரிசோதனை, காசநோய், புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் மட்டுமின்றி, பொது மருத்துவம், இதய மருத்துவம் போன்ற பல்துறை மருத்துவ ஆலோசனைகளும் வழங்கப்படுகின்றன.
முதல் நாளில் 44,418 பேர் மருத்துவ சேவைகளை பெற்றுக்கொண்டனர். தொடர்ந்து, இரண்டாவது வார முகாம்களில் 48,418 பேர் கலந்து கொண்டு பல்வேறு பரிசோதனைகளில் பங்கேற்றனர்.
மொத்தமாக இரண்டு வாரங்களில் 92,836 பேர் பயன் பெற்றுள்ளதாக மக்கள் நல்வாழ்வு துறை தெரிவித்துள்ளது.