அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ மற்றும் முன்னாள் டி.ஜி.பி. ஆர். நட்ராஜ், “பழனிசாமி தலைமையில் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்” என்று அழைப்பு விடுத்துள்ளார்.
சமீபத்தில், அ.தி.மு.க. அமைப்புச் செயலர் மற்றும் முன்னாள் எம்.பி. மைத்ரேயன் தி.மு.க.வில் இணைந்தார். பிராமணர் சமூகத்தைச் சேர்ந்த அவர், மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்தாலும், கட்சி தலைமை அதைக் கவனிக்கவில்லை. அதிருப்தியடைந்த மைத்ரேயன், நேற்று தி.மு.க.வில் சேர்ந்தார்.
அ.தி.மு.க.வில் மயிலாப்பூர் தொகுதி பாரம்பரியமாக பிராமணர் சமூகத்தினருக்கே ஒதுக்கப்பட்டு வந்தது. 2016 சட்டசபைத் தேர்தலில், நட்ராஜ் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு, 16 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஆனால், 2021 தேர்தலில் 14 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த பிறகு, அரசியல் நடவடிக்கைகளில் குறைவாகவே ஈடுபட்டார்.
மைத்ரேயன் கட்சியை விட்டு வெளியேறியதையடுத்து, நட்ராஜ் மீண்டும் அரசியல் சுறுசுறுப்பு காட்டத் தொடங்கியுள்ளார்.
தனது அறிக்கையில் அவர் கூறியதாவது:
“எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா வழியில் வளர்ந்த அ.தி.மு.க.வின் கனவுகளை நிறைவேற்ற, பழனிசாமி தலைமையில் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.
தலைமைக்கு விசுவாச மாகவும், முடிவுகளுக்கு கட்டுப்பட்டும் இருக்க வேண்டும். கட்சியை மீண்டும் ஆட்சியில் கொண்டு வர அனைவரும் உறுதியுடன் களம் காண வேண்டும்.
இதுவே உண்மையான அ.தி.மு.க. தொண்டர்களின் அடையாளம்.”
மைத்ரேயன் விலகிய பின் நட்ராஜ் அரசியல் அரங்கில் மீண்டும் செயல்பாடு
16