டிரம்ப்புக்கு அழைப்பு விடுத்த ஜெலன்ஸ்கி

by admin
Spread the love

எந்தவொரு முடிவை எடுப்பதற்கு முன்போ, பேச்சுவார்த்தைகக்கு முன்போ, உக்ரைன் வந்து பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்குமாறு அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அழைப்பு விடுத்துள்ளார்.

வடக்கு கிழக்கு உக்ரைன் நகரான சுமி மீது ரஷ்ய நடத்திய அடுத்தடுத்த ஏவுகணை தாக்குதலில் 21 பேர் உயிரிழந்தனர். மேலும், 80க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர்.

உக்ரைன் – ரஷ்யா நாடுகளுக்கு இடையிலான போர் 3 ஆண்டுகளை கடந்தும் தொடர்ந்து வருகிறது. இரு நாடுகளுக்கு இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால், இரு தரப்பினரிடையே தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. ஐரோப்பிய நாடுகள் உதவியுடன் உக்ரைன் ராணுவமும் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது.

அண்மையில் வடக்கு கிழக்கு உக்ரைன் நகரான சுமி மீது ரஷ்யா அடுத்தடுத்த ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில், மருத்துவமனைகள், குடியிருப்புகள் என ஏராளமான இடங்கள் சேதடைந்தன. இதில், 34 பேர் கொல்லப்பட்டனர்.

ரஷ்யாவின் இந்த தாக்குதல் சம்பவத்திற்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் அமைதி பேச்சுவார்த்தைக்கான நடவடிக்கையை ரஷ்யா குறைத்து மதிப்பிடுவதாக பிரான்ஸ் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியது. அதேபோல, பலவீனத்தின் வெளிப்பாடுதான் இந்த தாக்குதல் என்று ரஷ்யாவை ஜெர்மனி கண்டித்துள்ளது.

இந்த நிலையில், இந்த தாக்குதல் சம்பவம் குறித்து பேசிய உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ‘எந்தவொரு முடிவை எடுப்பதற்கு முன்போ, பேச்சுவார்த்தைகக்கு முன்போ, இங்குள்ள மக்களை வந்து பாருங்கள். வீரர்கள், மருத்துவமனைகள், தேவாலயங்கள், குழந்தைகளை சீரழித்து கொன்றுள்ளனர். ரஷ்ய அதிபர் என்ன செய்துள்ளார் என்று நீங்களே பாருங்கள்,’ எனக் கூறியுள்ளார்.

முன்னதாக இந்த தாக்குதல் குறித்து பேசிய டிரம்ப், இது ஒரு கொடூர சம்பவம் எனக் குறிப்பிட்டிருந்தார்.

Related Articles

Leave a Comment