17
சென்னை, ஆகஸ்ட் :
பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்துதல், இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய வேறுபாட்டை நீக்குதல் உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து, கடந்த மாதம் 16 மற்றும் 17 ஆம் தேதிகளில் சென்னை நகரில் தொடர் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தை, தமிழக தொடக்கப் பள்ளி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவான “டிட்டோஜாக்” ஏற்பாடு செய்தது.
மேலும், வரும் 22 ஆம் தேதி கோட்டை முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், டிட்டோஜாக் நிர்வாகிகளுடன் கலந்துரையாட பள்ளிக் கல்வித் துறை அழைப்பு விடுத்துள்ளது. இதற்கமைய, அமைச்சர் மகேஷ் தலைமையில், தலைமைச் செயலகத்தில், வரும் 14 ஆம் தேதி காலை 9.00 மணிக்கு பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.