தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்ற கட்டாயமாக தேர்ச்சி பெற வேண்டிய ஆசிரியர் தகுதி தேர்வு (TET) 2026 தேதிகளை ஆசிரியர் தேர்வு வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஜூலை 4, 5ல் TET தேர்வு
அறிவிப்பின்படி,
- ஜூலை 4, 2026 – TET முதல் தாள் தேர்வு
- ஜூலை 5, 2026 – TET இரண்டாம் தாள் தேர்வு
என நடைபெற உள்ளது.
பிப்ரவரி 18 முதல் ஏப்ரல் 10 வரை விண்ணப்பிக்கலாம்
TET 2026 தேர்விற்கு பிப்ரவரி 18 முதல் ஏப்ரல் 10, 2026 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) அதிகாரப்பூர்வ இணையதளம் www.trb.tn.nic.in வழியாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
ஆதார் இணைப்பு கட்டாயம்
விண்ணப்பதாரர்கள் தங்களின் பதிவுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முந்தைய ஆண்டுகளைப் போலவே தேர்வு நடைமுறைகள் பின்பற்றப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் நியமனத்தில் TET முக்கியம்
தமிழகத்தில்
- தொடக்கப் பள்ளிகளுக்கான இடைநிலை ஆசிரியர்கள்
- உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கான பட்டதாரி ஆசிரியர்கள்
நியமனம் செய்ய TET தேர்வு தகுதி அவசியம். தேசிய ஆசிரியர் கல்வி நிறுவனத்தின் வழிகாட்டுதலின்படி இத்தேர்வு நடத்தப்படுகிறது.
