சென்னையில் ரூஃப் டாப் ஓப்பன் பஸ்கள் வருது! இரட்டை அடுக்கு மின்சார பேருந்துகள் மூலம் புதிய அனுபவம்

by admin
Spread the love

சென்னையில் பயணிகளின் பயண அனுபவத்தை மேம்படுத்தும் நோக்கில் ரூஃப் டாப் ஓப்பன் டெக்கர் பேருந்துகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. நகரின் போக்குவரத்து சேவையை பிரீமியம் தரத்திற்கு உயர்த்தும் வகையில், இரண்டு அடுக்குகள் கொண்ட பேருந்தின் மேல் பகுதி திறந்த வெளி வடிவமைப்புடன் இயக்க போக்குவரத்துக் கழகம் திட்டமிட்டுள்ளது.

சுற்றுலா மற்றும் நகர போக்குவரத்து மேம்பாடு

மெரினா கடற்கரை, எழும்பூர் அருங்காட்சியகம், கலங்கரை விளக்கம், கண்ணகி சிலை உள்ளிட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களை சுற்றி பார்க்க ஏற்கனவே ‘சென்னை உலா’ சுற்றுலா பேருந்து இயக்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, தற்போது ஓப்பன் டாப் பேருந்துகள் அறிமுகப்படுத்தப்படுவது சுற்றுலாவை மேலும் ஊக்குவிக்கும் முயற்சியாக பார்க்கப்படுகிறது.

20 இரட்டை அடுக்கு மின்சார பேருந்துகள்

முதலில் 20 இரட்டை அடுக்கு ஏசி மின்சார பேருந்துகள் வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்ட நிலையில், தற்போது அதில்

  • 16 ஏசி மின்சார பேருந்துகள்
  • 4 நான்-ஏசி ரூஃப் டாப் ஓப்பன் பஸ்கள்

என ஒப்பந்தம் திருத்தப்பட்டுள்ளது.

12 ஆண்டு ஒப்பந்தம் – மாதம் 4,500 கி.மீ இயக்கம்

திருத்தப்பட்ட ஒப்பந்தத்தின் படி, 12 ஆண்டுகள் காலத்திற்கு சேவை வழங்கப்பட உள்ளது. ஒவ்வொரு பேருந்தும் மாதத்திற்கு குறைந்தபட்சம் 4,500 கிலோமீட்டர் இயக்கப்பட வேண்டும். கிலோமீட்டர் அடிப்படையில் ஆபரேட்டர்களுக்கு கட்டணம் வழங்கப்படும்.

பேருந்துகளை இயக்குவது மட்டுமின்றி, பராமரிப்பு மற்றும் சார்ஜிங் உள்கட்டமைப்பு உருவாக்கமும் ஒப்பந்த நிறுவனத்தின் பொறுப்பாகும்.

சென்னையில் மீண்டும் டபுள் டெக்கர் வரலாறு

சென்னையில் டபுள் டெக்கர் பேருந்துகள் முதலில் 1970ஆம் ஆண்டு அறிமுகமானது. 1980களில் நிறுத்தப்பட்ட சேவை, 1997ல் மீண்டும் தொடங்கி 2008ல் மறுபடியும் நிறுத்தப்பட்டது. தற்போது, மின்சார மற்றும் ஓப்பன் டாப் வடிவத்தில் மீண்டும் அறிமுகமாக உள்ளது.

சென்னை அழகை ரசித்தபடி பயணம்

லண்டன் போன்ற உலக நகரங்களில் காணப்படும் ஓப்பன் டாப் பேருந்துகள் போல், சென்னையிலும் விரைவில் பயணிகள் நகரின் அழகை ரசித்தபடி பயணம் செய்ய முடியும்.

Related Articles

Leave a Comment