• Thu. Dec 2nd, 2021

Namadhu Nagaram

No1 Neighborhood News Portal

தி.மு.க.,வுக்கு 11 ஓசி ஓட்டுக்கள்

Byadmin

Apr 8, 2021

திருச்சி,  மணப்பாறை தொகுதியில் தி.மு.க.,வுக்கு ஓசி ஓட்டுக்கள் விழுந்தது தெரிந்தும் அ.தி.மு.க.,வில் எதிர்ப்பு காட்டவில்லை என்பது கட்சியினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
திருச்சி மாவட்டம், மணப்பாறை சட்டசபைத் தொகுதிகுட்பட்ட, வையம்பட்டி அருகே தேக்கமலை கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நேற்று முன்தினம் ஓட்டுப்பதிவு நடந்தது. ஓட்டுப்பதிவுக்கு முன், ஓட்டுப்பதிவு எந்திரங்கள் சரியாக இருக்கிறதா என்று பார்க்க, கட்சிகளின் ஏஜெண்ட்கள் ஓட்டுப் போட்டு பார்த்தனர். அதில், 50 ஓட்டுக்கள் பதிவானது. இதில் தி.மு.க., ஏஜெண்ட் மட்டும், தனது கட்சி சின்னத்தில், 11 ஓட்டு போட்டுள்ளார். பின் அதை அழித்து விட்டு ஓட்டுப்பதிவு நடத்த வேண்டும். ஆனால் தேர்தல் நடத்தியவர்கள், அதை அழிக்காமல் அப்படியே ரெகுலர் ஓட்டுப்பதிவை ஆரம்பித்து விட்டனர்.
200 ஓட்டுக்களுக்கு மேல் பதிவான பின்னரே, மாதிரி ஓட்டுக்கள் அழிக்கப்படாதது தெரிய வந்தது. சிறிது நேரத்தில் அந்த எந்திரம் பழுதானது. பின் வேறு எந்திரம் வைத்து ஓட்டுப்பதிவு நடந்தது. ஆனால் கூடுதலாக போடப்பட்ட, 50 ஓட்டுக்கள் பற்றி எந்த கட்சியின் பூத் ஏஜெண்டுகளும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. முறைப்படி பார்த்தால் இங்கு மறுதேர்தல் நடத்த வேண்டும். ஆனால் தி.மு.க.,வுக்கு, 11 ஓட்டுக்கள் லாபம் என்பதால், அவர்கள் இதுகுறித்து வாய் திறக்கவில்லை. அதேபோல் அ.தி.மு.க., பூத் ஏஜெண்டுகளும் இப்பிரச்னை குறித்து புகார் அளிக்காமல் மவுனமாக இருந்து விட்டனர். இது அக்கட்சியினர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error

அனல் பறக்கும் செய்திகள், நிகழ்வுகள் பற்றி தெறிந்துகொள்ள எப்போதும் இணைந்திருங்கள் நமது நகரத்துடன்