• Thu. Aug 5th, 2021

Namadhu Nagaram

No1 Neighborhood News Portal

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் விர்ச்சுவல் பிரதே பரிசோதனை!

Byadmin

Apr 5, 2021

இறந்தவர்களின் உடலை கைகளால் கூறாய்வு செய்வது சடங்குகளுக்கு எதிராக இருப்பதாக பல்வேறு மதத்தினர் நம்புகின்றனர்.

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் விர்ச்சுவல் பிரதே பரிசோதனை நடைமுறைக்கு வந்துள்ள நிலையில், தென் கிழக்கு ஆசியாவில் இந்த வசதி கொண்ட முதல் நாடு என்ற சிறப்பை இந்தியா பெற்றுள்ளது. டெல்லி எம்ய்ஸ் மருத்துவமனையில் மெய்நிகர் உடற்பிரேத பரிசோதனை அல்லது வெர்ச்ஷூவல் ஆட்டோப்சி முறை பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இதன்மூலம் இறந்தவர்களின் உடலை கைகளால் தொடாமலேயே, அவரின் உடலை பிரேத பரிசோதனை செய்ய முடியும்.

மேலும், அவர் எப்படி இறந்தார் உள்ளிட்ட தகவல்களை துல்லியமாகவும், விரைவாகவும் கண்டுபிடிக்க முடியும். இறந்தவர்களின் உடலை கைகளால் கூறாய்வு செய்வது சடங்குகளுக்கு எதிராக இருப்பதாக பல்வேறு மதத்தினர் நம்புகின்றனர்.

நேசத்துக்குரியவர்களின் உடலை கூறாய்வு செய்ய குடும்பத்தினரும், உறவினர்களும் விரும்புவதில்லை. இந்நிலையில், இறந்தவர்களின் உடலுக்கும் மரியாதை கொடுக்கும் வகையில், அவர்களது உடலில் எந்தவொரு காயமும் ஏற்படுத்தாமல், இனி வரும் காலங்களில் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விர்ச்சுவல் மூலம் பிரேத பரிசோதனை செய்துகொள்ளலாம்.

விர்ச்சுவல் பிரேத பரிசோதனை (VIRTUAL AUTOPSY)

விர்ச்சுவல் பிரேத பரிசோதனை என்பது இறந்தவரின் உடலை கைகளால் தொடாமல் எம்.ஆர்.ஐ அல்லது சி.டி.ஸ்கேன்களைக் கொண்டு டெக்னாலஜி வழியாக ஆய்வு செய்வதாகும். இதில், இறந்தவரின் உடலின் தசைகள் மற்றும் உடல் பாகங்கள் பல்வேறு கோணங்களில் ஸ்கேன் செய்யப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்படும். உடலை கூறாய்வு செய்யாமல் டெக்னாலஜி மூலம் எளிதாக இந்த பரிசோதனையை செய்ய முடியும்.

ஸ்கேனிங் மற்றும் இமேஜிங் தொழில்நுட்பம் மூலம் செய்யப்படும் இந்த பரிசோதனையில், இறந்தவரின் உடல் முதலில் சி.டி.ஸ்கேனில் வைக்கப்படும். நொடிப்பொழுதில் ஸ்கேன் இயந்திரமானது உடலின் பாகங்களை 25,000 புகைப்படங்களை எடுத்துக் கொடுக்கும். அதனை மருத்துவ நிபுணர்கள் ஆய்வு செய்து இறந்தவர் எப்படி இறப்பை தழுவினார்? எங்கு எல்லாம் உடலில் காயம் உள்ளது? உள்ளிட்ட தகவல்களை அறிந்து கொள்வார்கள்.

எய்ம்ஸில் வெர்ச்ஷூவல் பிரதேச பரிசோதனை

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உடற்கூறாய்வு துறையின் தலைவராக இருக்கும் சுதிர் குப்தா, இதுகுறித்து பேசும்போது, இன்றிலிருந்து இறந்தவரின் உடலில் கத்தி மற்றும் பிளேடுகளை பயன்படுத்த தேவையில்லை எனக் கூறினார். விர்ச்சுவல் பிரதேபரிசோதனை மூலம் இறந்தவரின் எப்படி இறந்தார்? உள்ளிட்ட தகவல்களை டிஜிட்டல் முறையிலேயே ஆய்வு செய்து, கொடுக்க முடியும் எனக் கூறினார்.

விர்ச்சுவல் பிரதேபரிசோதனை சிறந்தது ஏன்?

விர்ச்சுவல் பிரதே பரிசோதனை சிறந்தது ஏன்? என சுதிர் குப்தா விளக்கினார். அதில், சாதாரண உடற்கூறாய்வு செய்வதற்கு சுமார் 6 மணி நேரம் வரை கூட ஆகும் எனத் தெரிவித்த அவர், விர்ச்சுவல் பிரதே பரிசோதனையில் வெறும் 10 நிமிடங்களில் அனைத்து சோதனைகளையும் நிறைவு செய்துவிடலாம் எனக் கூறினார். இது பிரேத பரிசோதனைக்காக மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலைமைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளதாகவும் சுதிர் குப்தா கூறினார். தொடர்ந்து பேசிய அவர், இறந்தவரின் உடலின் கண்ணியமும் இனிமேல் காக்கப்படும் என தெரிவித்தார். குடும்பத்தினரும், உறவினர்களும் தங்களின் நேசத்துக்குரியவர்களின் உடல் கூறாய்வு செய்ப்படுவதை விரும்புவதில்லை எனத் தெரிவித்த அவர், அவர்களின் எண்ணத்துக்கும் மதிப்பு கொடுக்க விர்ச்சுவல் பிரேத பரிசோதனை சிறந்ததாக உள்ளது என கூறினார்.

விர்ச்சுவல் பிரேத பரிசோதனை தற்போது அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஸ்விசர்லாந்து உள்ளிட்ட நாடுகளில் நடைமுறையில் உள்ளன.

 

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error

அனல் பறக்கும் செய்திகள், நிகழ்வுகள் பற்றி தெறிந்துகொள்ள எப்போதும் இணைந்திருங்கள் நமது நகரத்துடன்