• Sun. Sep 19th, 2021

Namadhu Nagaram

No1 Neighborhood News Portal

மக்களே.. மாஸ்க் அணிந்து ஓட்டுப்போடுங்கள்: சுகாதாரத்துறை செயலர் வேண்டுகோள்

Byadmin

Apr 5, 2021

தேர்தலில் மக்கள் அனைவரும் மாஸ்க் அணிந்து ஓட்டுப்போட செல்ல வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை தேனாம்பேட்டையில் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தேர்தல் நாளான நாளை (ஏப்.,6) மக்கள் அனைவரும் கட்டாயம் மாஸ்க் அணிந்து ஓட்டுப்போட போகவேண்டும். மாஸ்க் இல்லையெனில் ஓட்டளிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள். அங்கு அனைவருக்கும் உடல்வெப்ப பரிசோதனை செய்யப்படும். இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் ஒரு லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்திலும் படிப்படியாக உயர்ந்து 85 ஆயிரம் சோதனைகளில் 3,500 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏப்.,7ம் தேதிக்கு பிறகு வீடு வீடாக சென்று காய்ச்சல் பரிசோதனையை முழுவீச்சில் செய்ய உள்ளோம்.

தமிழகத்தில் மத்திய அரசிடம் இருந்து 54 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் வந்தாலும், 32 லட்சம் டோஸ் மட்டுமே போடப்பட்டுள்ளது. தேர்தல் நேரத்தால் தடுப்பூசி போடுவது குறைந்துள்ளது. 2வது டோஸ் தடுப்பூசி செலுத்திய 14 நாட்களுக்கு பிறகு 75 முதல் 80 சதவீதம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை. சிலருக்கு பாதிப்பு ஏற்பட்டாலும் தீவிர பாதிப்பு இருக்காது. எனவே 45 வயதுக்கு மேற்பட்டோர்கள் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள்.

அதிகமானோர் கூடும் கலாசார நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வதை மக்கள் தவிர்க்க வேண்டும். வரும் 6ம் தேதிக்கு பிறகு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்ற வதந்திகளை நம்ப வேண்டாம். தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தும் திட்டம் இல்லை. 7ம் தேதிக்கு பிறகு கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error

அனல் பறக்கும் செய்திகள், நிகழ்வுகள் பற்றி தெறிந்துகொள்ள எப்போதும் இணைந்திருங்கள் நமது நகரத்துடன்