• Sat. May 15th, 2021

Namadhu Nagaram

No1 Neighborhood News Portal

எங்கள் ஓட்டு விற்பனைக்கு அல்ல என எழுதி வாசலில் மாட்டுங்கள் – கமல்ஹாசன் வேண்டுகோள்

Byadmin

Mar 7, 2021

எங்கள் ஓட்டு விற்பனைக்கு அல்ல” தமிழகத்தில் சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதி தமிழகத்தில் நடைபெற உள்ளது. இதில் எப்படியும் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று திமுகவும், 3வது முறையாக ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று அதிமுகவும் தீவிரமாக வேலை செய்து வருகின்றன.

Kamal requested to put up a board at the door saying the votes are not for sale

இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தலைமையில் ஒரு அணியும் தனியாக சட்டசபை தேர்தலை சந்திக்கிறது. இந்த அணியில் சமத்துவ மக்கள் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி ஆகியவை இடம் பெற்றுள்ளன.

கமல்ஹாசன் சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தை மீண்டும் தொடங்கிய நிலையில், திமுக மற்றும் அதிமுகவை கடுமையாக விமர்சித்து பேசி வருகிறார். குறிப்பாக திமுகவையும் ஸ்டாலினையும் அவர் இதுவரை இல்லாத அளவிற்கு நேற்று விமர்சனம் செய்தார். தப்பில்லாமல் ஸ்டாலினால் தான் எழுதி தருவதை படிக்க முடியுமா என்று கொளத்தூரில் கமல் சவால் விட்டார்.

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error

அனல் பறக்கும் செய்திகள், நிகழ்வுகள் பற்றி தெறிந்துகொள்ள எப்போதும் இணைந்திருங்கள் நமது நகரத்துடன்