• Fri. Apr 16th, 2021

Namadhu Nagaram

No1 Neighborhood News Portal

மெட்ரோ ரயில் சேவை அதிகரிப்பு

Byadmin

Feb 11, 2021

மெட்ரோ ரயில் போக்குவரத்து அதிகரிக்கப்பட்டுள்ளது.
சென்னை விமான நிலையம் – வண்ணாரப்பேட்டை, பரங்கிமலை – எம்.ஜி.ஆர்., சென்ட்ரல் நிலையம் இடையே, மெட்ரோ ரயில் இயக்கப்படுகிறது. இப்பாதையில்,  திங்கள் முதல், சனிக்கிழமை வரை, காலை, 8:00 மணி முதல், 10:00 மணி வரையும், மாலை, 4:00 மணி முதல், 7:00 மணி வரையும், ஏழு நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இன்று முதல், 5 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும்.
காலை, 5:30 மணியில் இருந்து, 8:00 மணி வரையும், காலை, 10:00 மணி முதல், மாலை, 4:00 வரையும், இரவு, 7:00 மணி முதல், இரவு, 10:00 மணி வரையும், 10 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும்.
இரவு, 10:00 மணி முதல், 11:00 மணி வரை, 28 நிமிட இடைவெளிக்கு பதிலாக, இன்று முதல், 15 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும்.
ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசு பொது விடுமுறை நாட்களில், நாள் முழுவதும், 20 நிமிட இடை வெளியில், ரயில்கள் இயக்கப்படும் என, மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error

அனல் பறக்கும் செய்திகள், நிகழ்வுகள் பற்றி தெறிந்துகொள்ள எப்போதும் இணைந்திருங்கள் நமது நகரத்துடன்