• Sat. May 15th, 2021

Namadhu Nagaram

No1 Neighborhood News Portal

துாசி தட்டப்படுமா.. காவிரி குடிநீர் திட்ட ஆவணங்கள் ..!!!

Byadmin

Apr 8, 2021

சிங்கம்புணரி ஒன்றியத்தில் கிராம ஊராட்சிகளுக்கு காவிரி குடிநீர் வழங்கும் திட்டத்தை கிடப்பில் போட்டுள்ளதால், காவிரி குடிநீர் கிடப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்த ஒன்றியத்தில் 30 கிராம ஊராட்சிகளில் 120 க்கும் மேற்பட்ட உட்கடை கிராமங்கள் உள்ளன. அனைத்து கிராமங்களிலும் காவிரி குடிநீர் திட்டம் செயல்படுத்துவதற்காக திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக அனைத்து ஊராட்சிகளின் 14வது நிதிக்குழு கணக்குகளில் இருந்து 10 முதல் 20 லட்ச ரூபாய் வரை பிடித்தம் செய்யப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வைக்கப்பட்டுள்ளது. தேனம்மாள்பட்டியில் நீரேற்று நிலையம் அமைத்து அங்கிருந்து அனைத்து ஊராட்சிகளுக்கும் காவிரி நீரை பம்பிங் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இதற்காக திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி துவங்கியது. ஆனால் தேர்தல் பணிகளில் அதிகாரிகள் ஆர்வம் காட்டியதால் இத்திட்டத்திற்கான திட்ட மதிப்பீடு அறிக்கை தயாரிக்கும் பணியை கிடப்பில் போட்டுள்ளனர்.

தற்போது தேர்தல் முடிந்த நிலையில் மீண்டும் திட்டம் தொடர்பான ஆவணங்களை துாசி தட்டி எடுத்து திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும்.

Please follow and like us:

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error

அனல் பறக்கும் செய்திகள், நிகழ்வுகள் பற்றி தெறிந்துகொள்ள எப்போதும் இணைந்திருங்கள் நமது நகரத்துடன்