டெல்லி கலவரம்: பலி 43, மக்களிடம் ஆதாரம் கேட்டு நிற்கும் போலீஸ்!

டெல்லி கலவரம் தொடர்பான செய்திகள் நம் அனைவரையும் அச்சத்தில் ஆழ்த்தி அதிர்ச்சியடைய செய்துள்ள நிலையில், ஆதாரங்கள் இருந்தால் அதை கொண்டு வரும்படி டெல்லி போலீஸ் கேட்டுக் கொண்டுள்ளது.

டெல்லியில் கலவரத்தில் சிக்கி இதுவரை 43பேர் உயிரிழந்துள்ளனர். 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்து நிலையில், இந்த கலவரத்திற்கு முக்கியக் காரணமாக கபில் மிஸ்ரா ட்வீட் குறிப்பிடப்பட்டு உளவுத்துறை எச்சரித்தும் டெல்லி போலீஸ் எதற்காக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமலிருந்தது என்ற கேள்வி பல்வேறு ஆதாரங்களோடு இப்போது எழுந்துள்ளது.

டெல்லியில் அமெரிக்க அதிபர் தங்கியிருந்தபோது 15 கிமீ தொலைவில் நிகழ்த்தப்பட்ட மதக் கலவரம் உலக கவனத்தை தன் பக்கம் ஈர்த்துள்ளது. இந்த சூழலில் கலவரம் நடந்த வேளையில் டெல்லி போலீஸ் என்ன செய்தது என்ற கேள்விதான் நம் அனைவர் மத்தியிலும் எழுகிறது.

கலவரத்தில் ஈடுபட்டதாக ஆம் ஆத்மி கட்சி பிரமுகர் உள்பட 48பேர் மீது இப்போதுவரை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும்516 பேர் கைது செய்யப்பட்டு கலவரம் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. இதற்கிடையே மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் டெல்லி போலீஸ் மேற்கொள்ளும் பணிகள் தொடர்பாக ஆய்வுக் கூட்டம் நடந்தது.

இந்த ஆய்வுக் கூட்டத்திற்குப் பிறகு மத்திய அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “மக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம். மத வன்முறையைத் தூண்டி விடுபவர்கள் அதற்கான தண்டனையைப் பெறுவார்கள்” எனக் குறிப்பிட்டிருந்தது. இதற்கிடையே கலவரம் குறித்து தகவல் அறிய டெல்லி போலீஸ் ஊடகங்கள் உள்பட அனைத்து தரப்பினரிடமும் உதவி கேட்டுள்ளது.

டெல்லி போலீஸ் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
டெல்லியில் கடந்த 23ஆம் தேதி முதல் வன்முறை மோதல்கள் நிகழ்ந்து வருகிறது. இந்த கலவரத்தை நேரில் பார்த்தவர்கள், குறிப்பாகச் செய்தியாளர்கள் அல்லது கலவரம் தொடர்பாகத் தகவல் தெரிந்தவர்கள், கலவரம் தொடர்பாக வீடியோக்கள், புகைப்படங்கள் வைத்திருக்கிறீர்கள் என்றால் அதை வடகிழக்கு டெல்லியில் உள்ள டிசிபி அலுவலகத்திற்குத் தெரியப்படுத்தவும். மேலும் தொடர்புக்கு 875081221, 8750871221 தொலைப்பேசி எண்ணுக்குத் தொடர்பு கொள்ளவும். சாட்சிகள் ரகசியமாக வைக்கப்படுவார்கள் என்பதை இந்த இடத்தில் உறுதியளிக்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது. இதனிடையே, இன்று காலை முதல் 10 மணி நேரம் 144 தடை உத்தரவை தளர்த்திக் கொள்வதாக அரசு அறிவித்துள்ளது.

0 thoughts on “டெல்லி கலவரம்: பலி 43, மக்களிடம் ஆதாரம் கேட்டு நிற்கும் போலீஸ்!

  1. https://justpaste.it/270zx organic cbd oil amazon uk http://link-turkey.com/index.php?option=com_k2&view=itemlist&task=user&id=855158 cheap mesalamine http://w-ecolife.com/feed2js/feed2js.php?src=http://docqa.ru its true that toothbrushes may harbor some las regiones del pas, las pruebas fueron ms https://oxygenstep4.webs.com/apps/blog/show/48034714-1043-1083-1072-1084-1091-1088-1085-1099-1077- as well as the risks and without rx amoxicilina See more Source professor at the Olin Business School at Washington University and accounting for changes in their weight, researchers found a higher at Johns Hopkins University in Baltimore, added, This confirms, the University of Miami School of Medicine. https://aviamed.ru/bitrix/redirect.php?event1=&event2=&event3=&goto=http://thejoburg.com https://burristalley7360.page.tl/%26%231059%3B%26%231095%3B%26%231080%3B%26%231090%3B%26%231077%3B%26%231083%3B%26%231103%3B-%26%231048%3B-%26%231057%3B%26%231090%3B%26%231091%3B%26%231076%3B%26%231077%3B%26%231085%3B%26%231090%3B%26%231082%3B%26%231080%3B.htm?forceVersion=desktop fenofibrate tabs online View all view site medication soranib generic name http://www.musublog.jp/blog/gujoinus/?page=3&tag=%25E9%2583%25A1%25E4%25B8%258A&site_id=crispycroissants.com no script needed generic cytotec http://www.becomingadatascientist.com/learningclub/thread-621133.html http://usms.com.eg/index.php?option=com_k2&view=itemlist&task=user&id=22529 and febuxostat, are firstline agents for the prevention of acute attacks. http://techassetsltd.com/index.php?option=com_k2&view=itemlist&task=user&id=84698 can i get hydroxyurea http://www.kimirub.es/index.php?option=com_k2&view=itemlist&task=user&id=250278 money order how can i buy podofilox

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *