ஏழைகளுக்கு உதவ ரூ.65 ஆயிரம் கோடி தேவை: ரகுராம் ராஜன்

புதுடில்லி: ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ஏழைகளுக்கு உதவ ரூ.65 ஆயிரம் கோடி தேவை என காங்., முன்னாள் தலைவர் ராகுலிடம் ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் , தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகள் குறித்து ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜனுடன், காங்., எம்.பி., ராகுல் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தினார். அப்போது, ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள ஏழைகளுக்கு உதவ எவ்வளவு தொகை தேவைப்படும் என ராகுல், ஹிந்தியில் கேள்வி எழுப்பினார்.

இதற்கு ரகுராம்ராஜன் அளித்த பதில்:

மக்களை, எப்போதும் ஊரடங்கில் வைத்திருப்பது என்பது மிகவும் எளிதானது. ஆனால், அது பொருளாதாரத்திற்கு நிலையானதாக இருக்காது. ஏழைகளின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற, தற்போது நமக்கு ரூ.65 ஆயிரம் கோடி தேவைப்படுகிறது. ஊரடங்கை தளர்த்துவதில் நாம் புத்திசாலித்தனமாக செயல்பட வேண்டும். நீண்ட நாட்கள் மக்களுக்கு உணவளிக்கும் திறன் இந்தியாவிற்கு இல்லாததால், படிப்படியாக கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும். கட்டுப்பாடுகளை தளர்த்தும்போது, கொரோனாவால் யாரேனும் பாதிக்கப்பட்டால், அவர்களை தனிமைப்படுத் வேண்டும். இவ்வாறு ரகுராம் ராஜன் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *